×

20 சதவீத போனஸ் வழங்க ேகாரி போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

திருச்சி, நவ.10: திருச்சி போக்குவரத்து மண்டல அலுவலகம் முன் அனைத்து ெதாழிற்சங்க மாநில கூட்டமைப்பின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும். டிஏ உள்ளிட்ட நிலுவை தொகைகளை வழங்க வேண்டும். அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி வட்டியை தொகையை குறைக்க கூடாது. மோட்டார் வாகன சட்டத்தை தனியாருக்கு சாதகமாக திருத்தம் செய்யக்கூடாது. வேலை நேரத்தை அதிகரிக்க கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து திருச்சி மண்டல அலுவலகத்தில் மாநில கூட்டமைப்பின் முடிவின்படி முற்றுகை, ஆர்ப்பாட்டம் நேற்று கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள மண்டல போக்குவரத்து அலுவலகம் அருகே நடந்தது. கூட்டமைப்பு தலைவரும், தொமுச பொதுச்செயலாளருமான குணசேகரன் தலைமை வகித்தார். தலைவர் பழனிசாமி, பொருளாளர் அப்பாவு, சிஐடியூ பொதுச்செயலாளர் கருணாநிதி, தலைவர் சீனிவாசன், ஏஐடியூசி பொதுச்செயலாளர் சுப்ரமணியன், தலைவர் நேருதுரை, ஐஎன்டியூசி தலைவர் துரைராஜ், மாதவன் உள்பட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Tags : Demonstration ,Gori Transport Trade Union Confederation ,
× RELATED விவசாயிகளுக்கு உரக்கட்டு செயல்விளக்க பயிற்சி